×

காசோலை மோசடி வழக்கு: விதிகள் மாற்றியமைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: காசோலை மோசடி வழக்குகளை முடித்து வைப்பதற்கான விதிகளை மாற்றியமைத்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் மன்மோகன் மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வு உத்தரவில்; சாட்சிய பதிவுக்கு முன் காசோலை தொகை தந்தால் அபராதமின்றி வழக்கை முடிக்கலாம். தீர்ப்புக்கு முன் தொகை செலுத்தினால், கீழமை நீதிபதி கூடுதலாக 5% வசூலித்து வழக்கை முடிக்கலாம். கோர்ட்டில் மேல்முறையீடு இருந்தால், தொகையில் 7.5% ஐ கூடுதலாக பெற்று வழக்கை முடிக்கலாம். உச்சநீதிமன்றத்தில் தொகை செலுத்தினால், காசோலை தொகையில் கூடுதலாக 10%ஐ செலுத்தவேண்டும் என தாமோதர் பிரபு வழக்கு தீர்ப்பில் வழங்கிய வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் மாற்றியமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags : Supreme Court ,Delhi ,Justices ,Manmohan ,NV Anchariya ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...