×

அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை ரத்து செய்தது ஐசிசி..!!

டெல்லி: அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த முடிவு உலக கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அமெரிக்க கிரிக்கெட் வாரியம் உறுப்பினராக உள்ளது. ஐசிசியின் விதிகளை அமெரிக்க கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து மீறி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகளை முறையாக நியமிக்காதது போன்ற 8 விதிமீறல்கள் அமெரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டது. மேலும், 8 விதிமீறல்களையும் சரிசெய்வதற்கு ஓராண்டு ஐசிசி நிர்வாகம் அவகாசம் அளித்திருந்தது. ஆனால், அவற்றில் ஒரு விதிமீறல்களைகூட அமெரிக்க கிரிக்கெட் வாரியம் சரிசெய்யாததால், உறுப்பினர் அந்தஸ்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் உறுப்பினர் அந்தஸ்தை அமெரிக்க கிரிக்கெட் வாரியம் இழந்துள்ளதால், இனி உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் பங்கேற்க முடியாது.கடந்த 2024 டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தான்அணியை வீழ்த்தி, சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அமெரிக்க அணி அதிர்ச்சி அளித்தது.

இதன்காரணமாக, 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கு அமெரிக்க அணி தகுதிபெற்றுள்ளது. ஐசிசியின் நடவடிக்கையால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள இந்த தொடரில் அமெரிக்க அணி பங்கேற்க முடியாத ஏற்பட்டுள்ளது. இன்னும் 5 மாதங்களுக்குள் ஐசிசி குறிப்பிட்ட 8யின் விதிமீறல்களையும் அமெரிக்க அணி சரிசெய்தால், மீண்டும் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : ICC ,American Cricket Association ,Delhi ,International Cricket Council ,American Cricket Board ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...