×

உறுப்பு தான விழிப்புணர்வில் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு விருது

 

கோவை, செப். 24: கோவை  ராமகிருஷ்ணா மருத்துவமனை, உறுப்பு தான துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக தமிழக அரசால் கவுரவிக்கப்பட்டது.
உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதிலும், சமூகத்தில் நேர் மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் மருத்துவமனை வகிக்கும் பங்களிப்பை பாராட்டும் விதமாக நேற்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உறுப்பு தான தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவை  ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருது வழங்கினார். உறுப்பு தான விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழிகளில் சிறப்பான செயல் திறனுக்கான இந்த விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதன்மை செயலாளர் செந்தில் குமார், மற்றும் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக மக்கள் தொடர்புத் துறை தலைவர் டாக்டர் பிரகதீஸ்வரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் விஸ்வதாத் ஆகியோர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டனர்.

Tags : Ramakrishna Hospital ,Government of Tamil Nadu ,
× RELATED சூலூரில் மாணவியிடம் பேசியதால்...