கோவை, டிச. 17: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் நேற்று மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகேயை சந்தித்து புகார் மனு அளித்தனர். அப்போது அவர்கள், ‘‘சுல்தான்பேட்டையில் நீண்ட காலமாக நாங்கள் கோரிக்கை விடுத்தபடி பஸ் ஸ்டாப் கட்டும் பணி நடந்தது. ஆனால் இந்த இடத்திற்கு அருகேயுள்ள ஒரு நபர், பஸ் ஸ்டாப் கூடம் அமைக்க தடையாக இருக்கிறார். வேலை செய்ய விடாமல் அவர் இடையூறு செய்கிறார். இதுவரை நாங்கள் பஸ் ஸ்டாப் இல்லாமல் மழை வெயிலில் தவித்து வருகிறோம். தனக்கு ெசாந்தமில்லாத இடத்தை அவர் அபகரிக்க முயற்சி செய்கிறார். எனவே இடத்தை ஆய்வு செய்து பணிகளை தடையின்றி நடக்க உதவி செய்ய வேண்டும்’’ என ெதரிவித்தனர். அப்போது கூடுதல் கலெக்டர், அரசு பணிகளை ஒப்புதல் பெற்று செய்யும்போது அதை தடுப்பது தவறு. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பணிகளை நிறுத்த மாட்டோம், ெதாடர்ந்து செய்வோம் என உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கேயிருந்து சென்றனர்.
