×

தா.பேட்டை தனியார் நூற்பாலையில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு

தா.பேட்டை, டிச.23: தா.பேட்டையில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சென்னை தொழிற்சாலை துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் உமாசங்கர் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தா.பேட்டையில் இயங்கி இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 14 குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்வது கண்டறியப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்கள் திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் தொழிற்சாலை துறை கண்காணிப்பு அலுவலர்கள் தா.பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து குழந்தை தொழிலாளர்களை பணியில் வைத்திருந்தது தொடர்பாக தனியார் நூற்பாலையின் மேலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தனியார் நூற்பாலையில் 14 குழந்தை தொழிலாளர்கள் மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : child laborers ,Dhaka ,spinning mill ,
× RELATED நகைப்பட்டறையில் பணிபுரிந்த 8 குழந்தை...