×

கலெக்டர் அறிவிப்பு கரூர் நகராட்சி காசிம் சாகிப் தெருவில் சேறும், சகதியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

கரூர், டிச. 23: கரூர் நகராட்சிக்குட்பட்ட காசிம் சாகிப் தெரு மற்றும் அன்சாரி தெருவில் உள்ள சாலையில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சியின் மையப்பகுதியில் காசிம் சாகிப் தெரு உள்ளது. மார்க்கெட், ரயில்வே நிலையம் போன்ற முக்கிய பகுதிகள் இந்த தெருவை சுற்றிலும் உள்ளன. ஏராளமான குடியிருப்புகள் இந்த பகுதியில் உள்ளன. கடந்த சில நாட்களாக மழையின் காரணமாக இந்த தெருவின் சாலையில் சேறும் சகதியுமாக நடந்து செல்லவே முடியாத அளவில் உள்ளது. இதனால், அனைத்து தரப்பினர்களும் கடும் அவதியில் உள்ளனர். மேலும், இதனை விரைந்து சீரமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர், எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதி சாலையை மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Collector ,Karur Municipality Kasim Sahib Street ,motorists ,
× RELATED அரசு, தனியார் தொழிற்நிலையங்களில்...