×

மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை : மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்பேரில், ஆலந்தூர் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி மண்டலம் 12, வார்டு 165, வானுவம்பேட்டை பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை இன்று ஆய்வு செய்தோம்.

பொதுமக்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கான சேவைகள் முறையாக கிடைப்பது பற்றிக் கேட்டறிந்தோம். உடனுக்குடன் ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளுக்கான சான்றிதழ்களை வழங்கியதோடு, முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு அரசு ஏற்பாட்டிலேயே உணவு வழங்கி மகிழ்ந்தோம்!.இவ்வாறு தெரிவித்தார். மற்றொரு பதிவில், “மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.

இன்றைய தினம், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி – சென்னை மாநகராட்சி மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம். பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களையும் – ஆலோசனைகளையும் பெற்றோம்.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Tags : STALIN PROJECT CAMP ,STALIN ,Chennai ,Deputy ,Chief Assistant Secretary ,Stalin Project Camps ,Chief Minister ,Mu. K. Stalin ,
× RELATED பெருந்துறையில் விஜய் இன்று பிரசாரம்:...