×

துலீப் கோப்பை கிரிக்கெட் மத்திய மண்டலம் சாம்பியன்: ரத்தோட் ஆட்ட நாயகன்

பெங்களூரு: துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தெற்கு மண்டல அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மத்திய மண்டல அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது. பெங்களூருவில், 62வது துலீப் கோப்பை போட்டிகள் நடந்து வந்தன. இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு, மத்திய மண்டலமும், தெற்கு மண்டலமும் தகுதி பெற்றன. இப்போட்டி, கடந்த 11ம் தேதி முதல் நடந்து வந்தது. முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டலம் 149 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின் முதல் இன்னிங்சை ஆடிய மத்திய மண்டலம் 511 ரன்கள் குவித்தது. அந்த அணியின் யாஷ் ரத்தோட் 194, ரஜத் படிதார் 101 ரன்கள் விளாசினர்.

அதைத் தொடர்ந்து, 362 ரன்கள் பின் தங்கிய நிலையில் தெற்கு மண்டலம் 2வது இன்னிங்சை ஆடியது. அந்த அணி, 121 ஓவர்கள் ஆடி, 426 ரன் எடுத்து ஆட்டம் இழந்தது. தெற்கு மண்டல அணியின் அங்கித் வர்மா 99, ஆந்த்ரே சித்தார்த் 84 ரன்கள் எடுத்தனர். அதையடுத்து, நேற்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 65 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மத்திய மண்டலம் நேற்று 2வது இன்னிங்சை ஆடியது. 20.3 ஓவர்களில் அந்த அணி, 4 விக்கெட் மட்டுமே இழந்து 66 ரன் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 194 ரன் குவித்த மத்திய மண்டலம் அணி வீரர் யாஷ் ரத்தோட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக சரன்ஷ் ஜெயின் அறிவிக்கப்பட்டார்.

Tags : Duleep Cup Cricket Central Zone ,Rathod ,Bengaluru ,Central Zone ,South Zone ,Duleep Cup Cricket ,62nd Duleep Cup ,
× RELATED தென்னாப்பிர்க்காவுக்கு எதிரான டி20...