×

ஆசிய கோப்பையில் இன்று அசுர பலத்துடன் இந்தியா: அசராமல் போராடும் பாக்.

துபாய்: ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் ஆடவர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட்டில் இன்று ஏ பிரிவில் உள்ள நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு துபாயில் போட்டி தொடங்கும். இந்த கோப்பையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்டம் இதுவே. இந்தியாவில் நடைபெற வேண்டிய இந்த தொடர், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு எமிரேட்சுக்கு மாற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி கிரிக்கெட்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டி என்றால் அதனை போர் போலவே ஊடகங்கள் சித்தரிக்கின்றன. எப்படி இருந்தாலும் சூரியகுமார் தலைமையிலான இந்தியா, சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகவே இருக்கும். இரு அணிகளும் முதல் ஆட்டத்தில் கத்துக் குட்டி அணிகளை வீழ்த்தியுள்ளன. இன்று 2வது வெற்றிக்காக இரு அணிகளும் பலப்பரீ்ட்சை நடத்த உள்ளன.

Tags : India ,Asia Cup ,Pakistan ,Dubai ,Asia Cup T20 cricket ,United Arab Emirates ,
× RELATED உலகக் கோப்பை டி20: சூர்யகுமார்...