- உலக பூப்பந்து அரையிறு
- சாட்விக்
- சிராக் ஷெட்டி
- ஹேங்க்ளோ
- BWF உலக சுற்றுப்பயண இறுதிப் போட்டிகள்
- ஹேங்ஜோ, சீனா
- இந்தியா
- சாட்விக் சைராஜ் ரங்கிரெட்டி
- சிராக் ஷெட்டி
- சீனா
- லியாங் வெய்கெங்
ஹாங்சூ: சீனாவின் ஹாங்சூ நகரில் பிடபிள்யுஎப் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆடவர் இரட்டையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி, ஷிராக் ஷெட்டி இணை, சீனாவின் லியாங் வெய்கெங், வாங் சாங் இணையுடன் மோதியது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில், முதல் செட்டில் சிறப்பாக ஆடிய இந்திய இணை, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் வென்து. இருப்பினும் 2வது செட்டில் சுதாரித்து ஆதிக்கம் செலுத்திய சீன இணை, 21-17 என்ற புள்ளிக்கணக்கில் அந்த செட்டை வசப்படுத்தி சமநிலைக்கு கொண்டு வந்தனர். அதையடுத்து, வெற்றியை தீர்மானிக்கும் வகையில் நடந்த 3வது செட்டை, 21-13 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்திய சீன இணை, போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
