- Mutharasan
- சென்னை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- மாநில செயலாளர்
- Palaniswami
- கருகம்பாளையம்
- சாமலாபுரம், திருப்பூர் மாவட்டம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டம், சாமளபுரத்தின் அருகில் உள்ள கருகம்பாளையத்தைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் பழனிசாமி (57). தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சாலை போட்டிருப்பது குறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்து, விசாரணையை வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் பழனிசாமி, டீக்கடைக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும்போது, பேரூராட்சி தலைவர் பழனிசாமி, நான்கு சக்கர வாகனத்தில் சென்று சமூக செயல்பாட்டாளர் பழனிசாமியின் வாகனத்தின் பின்பக்கம் தாக்கியுள்ளார்.
நிலை தடுமாறி கீழே விழுந்த சமூக செயல்பாட்டாளர் பழனிசாமி மீது, மீண்டும் ஒருமுறை காரை ஏற்றியதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக மரணமடைந்தவர் மகன் சுகுமாறன் காவல் துறையில் புகார் கொடுத்துள்ளார். காவல் துறை, குடிபோதையில் நிகழ்ந்த விபத்தாக கூறியிருப்பது விசாரணையை திசை திருப்புவதாக சந்தேகம் ஏற்படுத்துகிறது. எனவே, போலீசார் நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளி சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க விடாமல் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
