×

பயிர்களை செயலி மூலம் கணக்கிடுவதை கைவிட வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

சென்னை,: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் பெய்த பெரு மழை, டிட்வா புயலால் 2,11,239 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் குறித்து கணக்கீட்டு செயலி மூலம் வேளாண் அலுவலர்கள் கணக்கெடுத்து வருகின்றனர். இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நடைமுறையால் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலம் பெற்றவர்கள், கோயில் நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், பட்டா மாறுதல் செய்யப்படாத நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவுகளில் உள்ள இடங்களில் சாகுபடி செய்பவர்கள், குத்தகைதாரர்கள் உள்ளிட்டோருக்கு நிவாரணம் கிடைக்காது என்ற நிலை உள்ளது. இந்த புதிய நடைமுறையை கைவிட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, வேளாண் உதவி அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும்.

Tags : Vigo ,Chennai ,General Secretary ,Wiko ,Tamil Nadu ,Tidwa ,
× RELATED 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும்...