×

தஞ்சாவூரில் நடைபெறுகிறது; ஜன. 5ம் தேதி அமமுக பொதுக்குழு கூட்டம்

சென்னை: சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. மேலும், அதிமுக – பாஜ தங்கள் கூட்டணியில் இணையும் கட்சிகளை இறுதி செய்ய தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதில், டிடிவி. தினகரனை சேர்க்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜனவரி 5ம் தேதி அமமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் நடைபெறும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,‘ அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், தலைவர் கோபால் (முன்னாள் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்) தலைமையில் வருகிற ஜனவரி 5ம் தேதி காலை 9 மணியளவில் தஞ்சாவூர், மஹாராஜா மஹாலில் நடைபெற உள்ளது. அனைத்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்,’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thanjavur ,AMUKA ,Chennai ,Timuka alliance ,Adimuka-Baja ,DTV ,
× RELATED ஒன்றிய அரசுக்கு வேல்முருகன் கண்டனம்