×

அன்புமணிக்கு அருகதை இல்லை என்பது 30 வருடங்கள் கழித்துதான் ராமதாசுக்கு தெரிந்துள்ளது: நடிகை கஸ்தூரி பேட்டி

சென்னை: அன்புமணி கட்சியில் இருப்பதற்கே அருகதை இல்லை என்பது, 30 வருடங்கள் கழித்துதான் ராமதாசுக்கு தெரிந்துள்ளது என்று நடிகை கஸ்தூரி கூறினார். தாம்பரம் சேலையூர் அடுத்த காமராஜபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தியாகி இமானுவேல் சேகரனார் நினைவுநாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் நடிகையும், பாஜ உறுப்பினருமான கஸ்தூரி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேவேந்திரகுல வேளாளர் உரிமை போராட்டத்திற்கு தனிப்பட்ட முறையில் மட்டுமின்றி நான் சார்ந்திருக்கும் கட்சி மூலமாகவும் மிகவும் மதிக்கும் பிரதமர் மோடி மூலமாகவும் சரியான தீர்வை எட்ட என்னால் முடிந்த உதவிகளை செய்வேன். 3 முறை எம்பி, ஒன்றிய அமைச்சராக பணியாற்றி 25, 30 வருடங்களாக அரசியலில் இருக்கும் அன்புமணி கட்சியில் இருப்பதற்கே அருகதை இல்லை என்பது ராமதாசுக்கு இத்தனை வருடங்கள் கழித்து இப்போது தெரிந்திருக்கிறது.

இனி, அடுத்தடுத்து எதையெலெ்லாம் தாமதமாக புரிந்து கூறபோகிறார், என்பது தெரியவில்லை. . கட்சியில் இருக்க அருகதை இல்லாத அன்புமணியை எப்படி ஒன்றிய அமைச்சராக தேர்வு செய்தார் என்ற கேள்வி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ramadass ,Anbumani ,Kasthuri ,Chennai ,Emanuel Sekaranar ,Kamarajapuram ,Selaiyur ,Tambaram.… ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பல்வேறு...