துபாய்: எட்டு அணிகள் பங்கேற்கும் பெண்களுக்கான 13வது உலகக்கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி தொடங்கி நவம்பர் 2ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இந்த நிலையில் போட்டிக்கான நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. இதில் இடம் பிடித்துள்ள 14 கள நடுவர்கள், நான்கு போட்டி நடுவர்கள் என அனைவரும் பெண்கள் ஆவார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக முழுவதும் பெண்கள் கொண்ட நடுவர் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது. கள நடுவர்கள் பட்டியலில் கிளைர் போலாசாக், ஜேக்லின் வில்லியம்ஸ், சுயே ரெட்பெர்ன் உள்ளிட்ட சிறந்த பெண் கள நடுவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
