×

நடிகர் அல்லு அர்ஜூனின் கட்டிடத்தை இடிக்க நோட்டீஸ்

திருமலை: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் ஜூபிலி ஹில்ஸில் புஷ்பா படத்தின் ஹீரோவான அல்லு அர்ஜூனின் குடும்பத்திற்கு சொந்தமான வணிக கட்டிடமான அல்லு பிசினஸ் பார்க் உள்ளது. இதன் கட்டுமானம் சட்டவிரோதமாகவும், ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐதராபாத் மாநகராட்சி வட்டம், 18வது துணை நகராட்சி ஆணையர் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடத்தை ஏன் இடிக்கக்கூடாது என காரணம் தெரிவிக்கும்படி அறிவிப்பை வெளியிட்டு நோட்டீஸ் வழங்கினார்.

Tags : Allu Arjun ,Tirumala ,Allu Business Park ,Jubilee Hills, Hyderabad, Telangana ,Hyderabad Municipal ,Corporation ,Circle ,
× RELATED நாடு முழுவதும் செயல்படும் 5,149 அரசுப்...