- தலைமை தேர்தல் ஆணையர்
- ஞானேஷ் குமார்
- உச்ச நீதிமன்றம்
- ஆதார்
- காங்கிரஸ்
- புது தில்லி
- பொது செயலாளர்
- ஜெய்ராம் ரமேஷ்
- தேர்தல் ஆணையம்
- ஞானேஷ்
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,\\” ஆதாரை அடையாள சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அப்பட்டமாக பின்பற்றாமல் இருப்பதற்காக தேர்தல் ஆணையத்தின் பெயரை குறிப்பிட்டு அவமானப்படுத்தப்பட வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் அவர் தலைமை தாங்கும் நிறுவனத்தையும் வரலாறு மன்னிக்காது.
மூன்று முறையாக இப்போது வாக்காளர்களை பதிவு செய்வதற்கு ஆதாரை அடையான சான்றாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தை உச்சநீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தி உள்ளது. அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி ஏஜெண்டுக்களை அங்கீரிக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அது பரிந்துரைத்த ஆவணங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் சொந்த குழப்பமாகும்”என்றார்.
