×

மனநலம் பாதித்தவர்கள் அரவணைப்பு

ஓசூர், டிச.17: ஓசூரில், ஜேசிஐ சிப்காட், தாய் உள்ளம் அறக்கட்டளை உள்ளிட்டவை இணைந்து பஸ் ஸ்டாண்டில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டு, ஆதரவற்றவர்களுக்கு முடி திருத்தி, சவரம் செய்து, சுத்தப்படுத்தி போர்வை மற்றும் புது ஆடைகள் உடுத்தி அவர்களுக்கு உணவு வழங்கினர். இது பயணிகளும் பொதுமக்களும் சமூக சேவை அமைப்புகளின் தன்னார்வ செயலை பாராட்டினர். இதில் தன்னார்வலர்கள் வேதமூர்த்தி, விஜயசங்கர், ஜெயமுருகன்,  இளவரசன், ராஜன், துரைப்பாண்டி, முரளி பாபு, சுந்தர், சல்மான் மற்றும் ஓசூர் டவுன் போலீசார் ரமேஷ், இளையரசு ஆகியோரும் ஈடுபட்டனர்.

Tags :
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது