×

புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்

புதுக்கோட்டை, செப்.2: புதுக்கோட்டை மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 12.9.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னை ஓய்வூதிய இயக்குநர் முன்னிலையில் “ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்” நடக்கிறது. இது தொடர்பாக ஓய்வூதியப் பலன்கள் குறித்து குறைகள் ஏதேனும் இருப்பின், மனு செய்ய விரும்புவோர் கீழ்காணும் படிவத்தில் தெளிவாக எழுதி அதனை தவறாமல் இரட்டைப்பிரதிகளில் எதிர்வரும் நாளைக்குள்(3ம் தேதி) புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்குக் கிடைக்குமாறு அனுப்பி வைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

“ஓய்வூதியர்கள்; குறைதீர்க்கும் கூட்டம் – 12.9.2025” கோரிக்கை படிவம் (தவறாமல் கீழ்காணும் அனைத்து விவரங்கள் பூர்த்திசெய்யப்படவேண்டும்) மனுதாரர் பெயர் மற்றும் முகவரி ,ஓய்வூதிய ஆணை எண், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் பெயர், ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கடைசியாக பணிபுரிந்த பதவி மற்றும் அலுவலகம், அரசு அலுவலர் ஓய்வு பெற்ற தேதி, இறந்த தேதி, தீர்வு செய்ய வேண்டிய கோரிக்கையின் விபரம், இதற்கு முன் மனு செய்திருந்தால் அதன்விபரம், எந்த அரசு அலுவலரால் கோரிக்கை தீர்வு செய்யப்பட வேண்டும் என்ற விவரங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

Tags : Pudukkottai District ,Pudukkottai ,District Pensioners ,Redressal ,Collector ,Aruna ,
× RELATED செய்யாறு பஸ் ஸ்டாண்டில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர் கைது