×

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு நீர்திறப்பு அதிகரிப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில அணைகளில் இருந்து, திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொறுத்து ஒகேனக்கல் காவிரி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில், நேற்று முன்தினம் காலை 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதேபோல், மேட்டூர் அணைக்கு, நேற்று முன்தினம் காலை 6,316 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 8,354 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியில் இருந்து, விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 119 அடியாகவும், நீர் இருப்பு 91.88 92.12 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags : Mettur ,Hogenakkal Cauvery ,Karnataka ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...