- கங்கனூர் காளியம்மன் கோயில்
- Kumbabhishekam
- ஊத்தங்கரை
- மகா காளியம்மன் கோயில்
- கங்கனூர்
- சங்கல்பம்
- வாஸ்து ஓமம்
- கும்ப அலக்ரம்
- யாகசாலை பிரவேசம்
ஊத்தங்கரை, ஆக.30: ஊத்தங்கரை அடுத்த கங்கனூரில் உள்ள மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக மங்கல இசையுடன் மகா சங்கல்பம், வாஸ்து பூஜை, வாஸ்து ஓமம், பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் காலை யாக பூஜை, மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கலசம் புறப்பாடு நடைபெற்றது. மகா காளியம்மன் கோயில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் மீது தீர்த்தம் தெளிக்கப்பட்டது. விழாவில் மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவை மக்கள் தொடர்பு திட்ட இணை இயக்குனர் நடேசன் மற்றும் விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்தனர்.
