சேலம், டிச.17: சேலம் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு (34). டிரைவரான இவர், கடந்த 11ம் தேதி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்காக களரம்பட்டி பகுதியில் நடந்து சென்றார். செல்போனில் பேசிக் கொண்டே நடந்து சென்றபோது, பின்னால் வந்த பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த ஆனந்தன்(எ) ஜிங்கிலி(23), செல்போனை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கவேலு, இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை பறித்து சென்ற ஆனந்தன்(எ) ஜிங்கிலியை கைதுசெய்தனர். அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்த போலீசார்,அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
