×

மினி ஆட்டோ மோதி பெண் பலி

கெங்கவல்லி, டிச.18: ஆத்தூர் அருகே பழனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தனபால்(54), விவசாயி. இவரது மனைவி ரேகா(49). உடல்நிலை சரியில்லாததால், தனியார் மருத்துவமனைக்கு டூவீலரில் சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு செல்வதற்காக நரசிங்கபுரம் பழைய ஆணையாளர் அலுவலகம் அருகில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, சேலத்திலிருந்து ஆத்தூர் நோக்கி வந்த மினி ஆட்டோ, டூவீலர் மீது மோதியதில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ரேகா கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அவரை மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பியோடிய மினி ஆட்டோ டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags : Kengavalli ,Dhanapal ,Palaniyapuram ,Athur ,Rekha ,Narasinghapuram Commissionerate ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்