- ஊட்டி அரசு மருத்துவமனை
- ஊட்டி
- ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
- அவசர துறை
- தமிழ்நாடு விபத்து
- திட்டம்...
ஊட்டி : ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு சார்பில் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை திட்டத்தின் வழிகாட்டுதல் படி மாதந்தோறும் நான்காவது வியாழக்கிழமை ஒவ்வொரு துறை சார்ந்த பணியாளர்கள், ஊழியர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பயற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மருத்துவமனை பல்நோக்கு பணியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது.கல்லூரி முதல்வர் ஸ்ரீசரவணன் தலைமை வகித்து பயிற்சி முகாமினை துவக்கி வைத்தார்.
பயிற்சியில் சுய நினைவின்றி இருப்பவர்களுக்கு சிபிஆர்., எனப்படும் செயற்கை மூச்சு மற்றும் நெஞ்சு பகுதியில் அழுத்தம் கொடுத்து இயல்பு நிலைக்கு கொண்டு வருவது தொடர்பாக செயல்முைற விளக்கம் அளிக்கப்பட்டது.
தலையில் காயமடைந்தவர்கள், முதுகு தண்டுவடத்தில் காயமடைந்தவர்கள்,ரத்தப்போக்கு மேலாண்மை,விபத்து அல்லது வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் உடலில் இருந்து ரத்தம் வெளியேறுவதை கட்டுப்படுத்துவது,விபத்தில் துண்டிக்கப்பட்ட பகுதி பராமரிப்பு,மாரடைப்பு,பக்கவாதம், வலிப்பு,பாம்பு கடி மற்றும் விஷ பூச்சிகள் கடி முதுலுதவி, 108 ஆம்புலென்ஸ்க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பது குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பயிற்சி முகாமில் மருத்துவர் ஜெயகணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
