- விநாயகர் சதுர்த்தி திருவிழா
- மதுக்கரை குவாரி அலுவலகம்
- மதுக்கரை
- வீர சிவாஜி அறக்கட்டளை
- கோயம்புத்தூர் மாவட்டம்
- விநாயகர்
மதுக்கரை, ஆக.29: கோவை மாவட்டம் மதுக்கரை குவாரி ஆபீஸ் பகுதியில் வீர சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக நேற்று காலை சுமார் 16 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதேச பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து விநாயகரை வழிபட்டனர்.
மேலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு வீர சிவாஜி நற்பணி மன்றத்தின் சார்பில் பொது மக்களுக்கு தலைவாழை இலை போட்டு அறுசுவை உணவு பரிமாறி கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு, விநாயககரை வழிபட்டு உணவு அருந்தி சென்றனர். விழா ஏற்பாடுகளை வீர சிவாஜி நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.
