×

கொச்சியில் சாப்ட்வேர் இன்ஜினியரை கடத்தி தாக்கிய வழக்கு கைதான கூலிப்படையினருக்கும் லட்சுமி மேனனுக்கும் என்ன தொடர்பு? போலீசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள ஆலுவாவை சேர்ந்த அலியார் ஷா சலீம் என்ற சாப்ட்வேர் இன்ஜினியர் கடந்த சில தினங்களுக்கு முன் தாய்லாந்தை சேர்ந்த தன்னுடைய பெண் தோழி மற்றும் 2 நண்பர்களுடன் கொச்சியிலுள்ள ஒரு மது பாருக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பிரபல நடிகை லட்சுமி மேனன் அடங்கிய ஒரு கும்பலுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்பின் பாரில் இருந்து காரில் புறப்பட்ட தன்னை நடிகை லட்சுமி மேனன் கும்பல் பின்தொடர்ந்து வந்து காரில் இருந்து இறக்கி அவர்களது காரில் ஏற்றிச்சென்று சரமாரியாக தாக்கியதாகவும், பின்னர் தன்னை வழியில் இறக்கி விட்டதாகவும் கூறி அலியார் ஷா சலீம் கொச்சி வடக்கு போலீசில் புகார் செய்தார்.

அலியார் ஷாவை தாக்கிய எர்ணாகுளத்தை சேர்ந்த மிதுன் மோகன் (35), அனீஷ் (30) மற்றும் சோனா (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். நடிகை லட்சுமி மேனன் தலைமறைவானார். அவரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கிடையே இந்த வழக்கில் கைதான 3 பேர் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைதானவர்களில் மிதுன் மோகன் மற்றும் அனீஷ் ஆகிய இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த இரு வருடங்களுக்கு முன் திருச்சூரை சேர்ந்த ஒரு நகை வியாபாரியை தாக்கி 244 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் மிதுன் மோகனும் ஒருவர் ஆவார். சிறையில் இருந்து இவர் சமீபத்தில் தான் ஜாமீனில் விடுதலையாகி இருந்தார். திருச்சூரை சேர்ந்த ஒரு நகை வியாபாரிக்காக இவர் கூலிப்படையாக செயல்பட்டு வந்துள்ளார். இவர் மீது எர்ணாகுளம் மற்றும் திருச்சூரில் ஏராளமான அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. இதே போல அனீஷுக்கு எதிராகவும் ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. கூலிப்படையை சேர்ந்த இவர்கள் இருவருடன் சினிமா துறையைச் சேர்ந்த நடிகை லட்சுமி மேனனுக்கு என்ன தொடர்பு என்பது குறித்து போலீ விசாரிக்கின்றனர்.

Tags : Kochi ,Lakshmi Menon ,Thiruvananthapuram ,Aliyar Shah Salim ,Aluva ,Ernakulam ,Kerala ,Thailand ,
× RELATED சட்ட நுணுக்கங்களை ஆராயாமல் ‘ஏஐ’...