×

மேட்டூர் நீர்மட்டம் 120 அடியாக 6வது நாளாக நீடிப்பு

மேட்டூர்: ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் இரவு 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 16,000 கனஅடியாக அதிகரித்தது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை, விநாடிக்கு 19,850 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலை 10,850 கனஅடியாக குறைந்தது.

நேற்றும் அதே அளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 10,850 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 6வது நாளாக 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

Tags : Mettur ,Okenakkal Cauvery ,Mettur dam ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...