×

நத்தம் பகுதியில் ஆக.25ல் மின்தடை

நத்தம், ஆக. 23: நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஆக.25ம் தேதி, திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம் நகர், அய்யாபட்டி, கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி,

கோட்டையூர், சிறுகுடி, பூதகுடி, பூசாரிபட்டி, பண்ணியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி ஆகிய ஊர்களில் மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

 

Tags : Natham ,Natham Sub ,station ,Natham Nagar ,Ayyappatti ,
× RELATED இலவச மருத்துவ முகாம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்