சென்னை: அகில இந்திய அளவிலான 64வது சீனியர் தடகளப் போட்டி சென்னையில் நடக்கிறது. அதில் 3வது நாளான நேற்று காலை ஆண்கள், பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் நடையோட்டப் பந்தயம் நடந்தது. பெண்கள் பிரிவில் தமிழ்நாடு வீராங்கனை மோகவி முத்துரத்தினா 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். அவர் 20 கிமீ தொலைவை ஒரு மணி 41 நிமிடங்கள் 34.72 விநாடிகளில் கடந்தார். அரியானா வீராங்கனை ரவினா ஒரு மணி 35 நிமிடங்கள் 123.49 விநாடிகளில் கடந்து முதல் இடத்தை பிடித்து தங்கமும், உத்தரகண்ட் வீராங்கனை பாயல் ஒரு மணி 40 நிமிடங்கள் 29.94 விநாடிகளில் கடந்து வெள்ளியும் வென்றனர்.
