×

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் பணி நியமன அணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் ரூ.60.85 கோடி செலவில் 5 வட்ட செயல்முறை கிடங்குகள், 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 2 நவீன சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை திறந்து வைத்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் பணி நியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (22.08.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 23.27 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள், 30.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் 7.20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு நவீன கிடங்குகள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் பணியாளர்களாக தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 63 நபர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 55 வாரிசுதாரர்களுக்கும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலும், பொது விநியோகத் திட்டத்திற்கான உணவு தானியங்களைச் சேமித்து வைத்திடும் நோக்குடன் கிடங்குகளின் கொள்ளளவினை உயர்த்தும் வகையிலும், உணவுப் பாதுகாப்பின் அங்கங்களான சேமிப்பு, விற்பனை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைத்திடவும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பினை வட்ட அளவில் உறுதி செய்யவும், பொதுவிநியோகத் திட்டத்தின் பயன்பாட்டிற்கான தானியங்களின் சேமிப்பிற்கான கொள்ளளவினை அதிகப்படுத்தும் விதமாகவும், அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், ஆத்துக்குறிச்சியில் 4.02 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன் கொள்ளளவிலும், மதுரை மாவட்டம், மதுரை மேற்கு வட்டம், மேலக்குயில்குடியில் 4.50 கோடி ரூபாய் செலவில் 2500 மெ.டன் கொள்ளளவிலும் உசிலம்பட்டி வட்டம்,

சீமானுத்துவில் 5.50 கோடி ரூபாய் செலவில் 3000 மெ.டன் கொள்ளளவிலும், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கங்கர்செவலில் 3.75 கோடி ரூபாய் செலவில் 2000 மெ.டன் கொள்ளளவிலும், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், கீழ்ப்புத்தூரில் 5.50 கோடி ரூபாய் செலவில் 3000 மெ.டன் கொள்ளளவிலும், என மொத்தம் 23.27 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 12.500 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள்; மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், திருவாதவூரில் 14.42 கோடி ரூபாய் செலவில் 15,000 மெ.டன் கொள்ளளவிலும், வாடிப்பட்டி வட்டம் குலசேகரன்பேட்டையில் 6.73 கோடி ரூபாய் செலவில் 7000 மெ.டன் கொள்ளளவிலும், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி.புடையூரில் 9.23 கோடி ரூபாய் செலவில் 9500 மெ.டன் கொள்ளளவிலும், என மொத்தம் 30.38 கோடி ரூபாய் செலவில் 31,500 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்;

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட குனிச்சி கிராமத்தில் 3.60 கோடி ரூபாய் செலவில் 3400 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள ஒரு நவீன சேமிப்புக் கிடங்கு, அரியலூர் மாவட்டம் – அரியலூர் வட்டம், தேளூர் கிராமத்தில் 3.60 கோடி ரூபாய் செலவில் 3400 மெ.டன் கொள்ளளவில் கட்டப்பட்டுள்ள ஒரு நவீன சேமிப்புக் கிடங்கு; என மொத்தம் 60 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 5 வட்ட செயல்முறை கிடங்குகள், 3 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் மற்றும் 2 நவீன சேமிப்புக் கிடங்குகள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள். மேலும், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் இளநிலை உதவியாளர் / உதவி சேமிப்புக் கிடங்கு மேலாளர் பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட 63 நபர்களுக்கும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய பணியாளர்களின் 55 வாரிசுதாரர்களுக்கு பட்டியல் எழுத்தர், அலுவலக உதவியாளர் / எடையாளர் / காவலர் ஆகிய பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன், தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத் தலைவர் திரு.ப.ரங்கநாதன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அ. ஜான் லூயிஸ் இ.ஆ.ப., தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர். ஜெ. விஜயா ராணி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags : Chief Minister ,MLA ,Tamil Nadu Consumer Goods Vanipak Corporation ,Tamil Nadu Storage Warehouse Company ,K. Stalin ,
× RELATED வரலாறு காணாத விலை உச்சம் தங்கம் ஒரு...