- இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை
- நெல்
- நெல்லா
- கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வா
- மாநகர மாவட்ட காங்கிரஸ்
- நெல்லா வன்னார்பெட்
- கிழக்கு மாவட்ட இளைஞர்
- ஜனாதிபதி
- ஓபெட் நியூபிக்
நெல்லை, ஆக.22: நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஒபேத் நியூபிகின் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரியபிரகாஷ் பங்கேற்றார். நிகழ்வில் தமிழக பொறுப்பாளர் சகரிகா ராவ் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட பொதுச்செயலாளர் பால்சாமி, மாநில பொதுச் செயலாளர் ஐபின் புரூஸ், நிர்வாகிகள் நிக்சன், செந்தில், அருண், தாமோதரன், ஆறுமுகராஜ், மகளிரணி குளோரிந்தாள் உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றினர். 2026ல் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் இளைஞர் காங்கிரசாரின் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
