×

சில்லி பாய்ன்ட்

* அகில இந்திய புச்சிபாபு கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்கள் நேற்று முடிந்தன. டிஎன்சிஏ தலைவர் அணி 196ரன் வித்தியாசத்தில் இமாச்சல் பிரதேச அணியை வீழ்த்தியது. டிஎன்சிஏ 11 அணி 2விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை சாய்த்தது.
* பல்கேரியாவில் நடைபெறும் உலக யு20 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக் 57கிலோ பிரிவில் நேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
* சிகிச்சைக்கு பிறகு ஓய்வில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி உடல் நிலை தேறி வருவதாகவும், பேசுவதில் மட்டும் சிரமம் இருப்பதாகவும் அவரது சகோதரர் வீரேந்திரா காம்ப்ளி நேற்று தெரிவித்தார்.
* கஜகஸ்தானில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி நடக்கிறது. அதில் நேற்று 10மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் சவுரப் சவுத்ரி, சுருச்சி இந்தர்சிங் இணை வெண்லத்தை வசப்படுத்தியது.
* ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் ஏ அணி முதலில் நடந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸியிடம் முழுமையாக இழந்தது. தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தனர். அதனை தொடர்ந்து இந்த 2 அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட்(4நாட்கள்) இன்று பிரிஸ்பேன் நகரில் தொடங்குகிறது.

Tags : Chilli Point ,All India Puchibabu Cricket Tournament ,TNCA ,President ,Himachal Pradesh ,Mumbai ,Bulgaria… ,
× RELATED டி20 உலக கோப்பைக்கு சூர்யகுமார் யாதவ்...