×

விபத்தில் கொத்தனார் சாவு

நெல்லிக்குப்பம், ஆக. 21:நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் வேலு மகன் பிரபாகரன் (38), கொத்தனார். சம்பவத்தன்று இரவு நெல்லிக்குப்பத்தில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வழியாக பாலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். வாழப்பட்டு ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் மொபட்டில் சென்றவர் திடீரென பிரேக் போட்டதால், மொபட் மீது பைக் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த பிரபாகரன் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Bricklayer ,Nellikuppam ,Prabhakaran ,Balur ,Melpattambakkam ,Anjaneyar temple ,
× RELATED குட்டிகளுடன் நாய் குறுக்கே வந்ததால் சாலையோர பள்ளத்தில் இறங்கிய அரசு பஸ்