×

மேம்பால பணிகளுக்காக அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம்: தி.நகர் செல்பவர்கள் எல்டாம்ஸ் சாலை வலது புறமாக செல்லலாம்

சென்னை: மேம்பால பணிக்காக சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் தேனாம்பேட்டை முதல் ஜெமினி மேம்பாலம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அண்ணா சாலையில் இருந்து தற்போது இருக்க கூடிய போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து அண்ணா மேம்பாலம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், தியாகராய சாலையில் இடதுபுறம் திரும்பி, மா.பொ.சி., சந்திப்பில் வலது புறம் திரும்பி, வடக்கு போக் சாலை வழியாக செல்ல வேண்டும் பின் அங்கிருந்து, விஜயராகவா சாலையில் வலது புறம் திரும்பி சற்று துாரம் சென்று, பின் இடது புறம் திரும்பி அண்ணாசாலை வழியாக செல்லலாம் அண்ணா சாலையிலிருந்து, தி.நகர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், அண்ணா சாலை எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி, தியாகராய சாலை வழியாகச் செல்லலாம்.

தி.நகரிலிருந்து அண்ணாசாலை நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்கள், தியாகராய சாலையில் உள்ள மா.பொ.சி., சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, வடக்கு போக் சாலை – விஜயராகவா சாலை வழியாக அண்ணாசாலையை அடையலாம். தெற்கு போக் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் மா.பொ.சி., சந்திப்பில் வலதுபுறம் திரும்ப அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக, அவ்வாகனங்கள் நேராக வடக்கு போக் சாலையை நோக்கிச் சென்று, பின் விஜயராகவா சாலையை அடைந்து, அங்கிருந்து அண்ணாசாலை வழியாக செல்லலாம் அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், விஜயராகவா சாலை நோக்கி வலது புறம் திரும்ப அனுமதிக்கப்பட மாட்டாது. இவ்வாறு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

 

Tags : Anna Salai ,T. Nagar ,Eldams Road ,Chennai ,Teynampet ,Gemini ,Anna… ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...