- அரவிந்த்
- பொலானிகா ஸ்ட்ரோஜ்
- 61வது ரூபின்ஸ்டீன் நினைவு சதுரங்கப் போட்டி
- போலந்து
- அரவிந்த் சிதம்பரம்
- தமிழிசை,
- ஜெர்மனி
* 2வது சுற்று முடிவில் அரவிந்த் முதலிடம்
போலானிகா ஸ்ட்ரோஜ்: போலந்தில் நடந்து வரும் 61வது ரூபின்ஸ்டெய்ன் நினைவு செஸ் போட்டியில் நேற்று 2வது சுற்றுப் போட்டிகள் நடந்தன. இப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம், ஜெர்மனி கிராண்ட் மாஸ்டர் மாத்தியாஸ் ப்ளுபேம் உடன் மோதினார். இப்போட்டியில் இரு வீரர்களும் சளைக்காமல் ஆடினர். ஒரு கட்டத்தில் போட்டி டிரா ஆனது. மற்றொரு போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரர் யாகுபோவ், போலந்து வீரர் ஜேன் கிளிம்கோஸ்கி மோதிய ஆட்டம் டிரா ஆனது. அதையடுத்து, புள்ளிப் பட்டியலில் அரவிந்தும், யாகுபோவும், 1.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.
* ஆசிய கோப்பை ஹாக்கி சின்னம் வெளியானது
ராஜ்கிர்: ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி போட்டிகள், வரும் 29ம் தேதி முதல் செப். 7ம் தேதி வரை, பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற உள்ளன. இப்போட்டிக்கான சின்னம், ‘சாந்த்’ என்ற பெயரில் நேற்று வெளியிடப்பட்டது. மறைந்த இந்திய ஹாக்கி ஜாம்பவான் வீரர் தியான்சாந்த் நினைவாக, அவரது பெயருடன் இந்த சின்னம் வெளியாகி உள்ளது. தொப்பி அணிந்த சிங்க முகத்துடன் கூடிய கார்ட்டூன் உருவம் கையில் ஹாக்கி மட்டையை பிடித்த நிலையில் இந்த சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை ஹாக்கி, தியான்சாந்தின் பிறந்த நாளான வரும் 29ம் தேதி துவங்குகிறது.
