×

‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ கூட்டாட்சியை பலவீனப்படுத்தும் – முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கருத்து!

டெல்லி : நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவதை செயல்படுத்த மக்களவையில் 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்யும் நாடாளுமன்றக் குழுவிடம் தனது எழுத்துப்பூர்வ கருத்துக்களை முன்வைத்தார் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா. அதன் விவரம் பின்வருமாறு..

*ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா’ கூட்டாட்சியை பலவீனப்படுத்தும். ஒரு சட்டம் அரசியலமைப்பு ரீதியாக செல்லுபடியானாலும், அது நாட்டுக்கு அவசியமானது என்று அர்த்தமல்ல.

*சட்டமன்றத் தேர்தல்களை எப்போது நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்க இந்த மசோதா தேர்தல் ஆணையத்திற்கு வரம்பற்ற அதிகாரங்களை அளிக்கிறது.

*தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் மாநிலத் தேர்தல்களை ஒத்திவைப்பது மறைமுக ஜனாதிபதி ஆட்சிக்கு சமம்.

*சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தேர்தல்கள் வெறும் தற்செயல் நிகழ்வுதான், அரசியலமைப்பால் நிச்சயிக்கப்பட்ட ஒன்றல்ல.

Tags : Chief Justice ,Sanjeev Khanna ,Delhi ,Lok Sabha ,Parliamentary Assembly ,
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...