×

தீபாவளி தொடர் விடுமுறை ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

சென்னை: தீபாவளி தொடர் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ரயில்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வேயின் முன்பதிவு காலமானது பயண தேதியைத் தவிர்த்து 60 நாட்களாக உள்ளது.

இதன் அடிப்படையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு ஆகஸ்ட் 17ம் தேதி (நேற்று) தொடங்கியது. குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது. தீபாவளிப் பயணத்திற்கான முன்பதிவு தேதிகள்:

இன்றுஅக்டோபர் 17ம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.ஆகஸ்ட் 19 (செவ்வாய்) அக்டோபர் 18ஆம் தேதி (சனிக்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.ஆகஸ்ட் 20 (புதன்): அக்டோபர் 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.

ஆகஸ்ட் 21 (வியாழன்)தீபாவளிப் பண்டிகையான அக்டோபர் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.ஆகஸ்ட் 22 (வெள்ளி) அக்டோபர் 21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம். ஆகஸ்ட் 23 (சனி) அக்டோபர் 22ஆம் தேதி (புதன்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.ஆகஸ்ட் 24 (ஞாயிறு) அக்டோபர் 23ஆம் தேதி (வியாழக்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.ஆகஸ்ட் 25 (திங்கள்)அக்டோபர் 24ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.

ஆகஸ்ட் 26 (செவ்வாய்) அக்டோபர் 25ஆம் தேதி (சனிக்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம்.ஆகஸ்ட் 27 (புதன்) அக்டோபர் 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பயணிக்க முன்பதிவு செய்யலாம். பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்க, தங்களது தீபாவளிப் பயணத்திற்கான ரயில் சீட்டுகளை குறிப்பிட்ட தேதிகளில் இருந்து முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு ரயில்வே சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக ரயில்களில் அக்டோபர் 13 முதல் 26 ஆம் தேதி வரை சொந்த ஊர் செல்வதற்கான பயணச் சீட்டை முன்பதிவு செய்து, அதே ரயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1-ஆம் தேதி வரை ஊர் திரும்புவதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும். என்பது குறிப்பிடத்தக்கது.

* மதுரை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய இடங்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் 10 நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காட்டியது.

 

Tags : Diwali ,Chennai ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...