×

மேட்டூர் அணையில் பாசனத்திற்கு நீர் திறப்பு; 22,000 கனஅடியாக அதிகரிப்பு

 

மேட்டூர்: ஒகேனக்கல்லில் நேற்று 4வது நாளாக, நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக தொடர்ந்து நீடித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,408 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 6,223 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 10,000 கனஅடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 500 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியில் இருந்து 22 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 118.51 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 118.25 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 90.70 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mettur Dam ,Mettur ,Hogenakkal ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...