×

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச யுபிஎஸ்சி பயிற்சி

சென்னை: அனைத்து தடைகசங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:  சுதந்திர தினத்தையொட்டி, பிரஜாஹிதா அறக்கட்டளை மற்றும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்தியாவின் முதல் தனித்துவமான யுபிஎஸ்சி பயிற்சியான ‘சேது’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தடைகளையும் உடைத்து, திறமையான மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தியாவின் சிவில் சர்வீஸ்களில் சம வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதும் இருந்து 30 முழுமையான கல்வி உதவித்தொகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். அடுத்த 4 ஆண்டுகளில், மொத்தம் 400 கல்வி உதவித்தொகைகளை வழங்கும் இலக்குடன், மாற்றுத்திறனாளிகளின் அரசியல் மற்றும் நிர்வாக துறைகளில் ஒரு நல்ல வாய்ப்பை உருவாக்கும். உதவித்தொகை தேர்வு ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும்.

அன்று நாடு முழுவதும் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமி மையங்களில் தேர்வு நடைபெறும். பாடக் கட்டணம், உதவி தொழில்நுட்பம் மற்றும் கற்றல் உபகரணங்களைச் சேர்ந்த முழுமையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேர்வுகளில் எழுத்தாளர், கூடுதல் நேரம், கையசை, மொழிபெயர்ப்பு, அணுகுமுறை மாதிரி தேர்வுகள் போன்ற வசதிகள் செய்து தரப்படும். இளைஞர்களை தேச சேவைக்காக உருவாக்கும் கனவுடன் இந்த அகாடமி தொடங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : UPSC ,Chennai ,All Barriers ,Shankar IAS Academy ,S.T. Vaishnavi ,Independence Day ,Prajahitha Foundation ,India ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...