×

நாட்டின் 79 வது சுதந்திர தினம்: சென்னையில் பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை: நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகரில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன அதன் படி சுதந்திர தினவிழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் அளிநர்கள் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது மேலும், கூடுதல் ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 9,100 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளார் சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ நிலையங்கள், வணிக வளாகங்கள் கடற்கரை பகுதிகள் , வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன தங்கும் விடுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்

Tags : 79th Independence Day of the ,Chennai ,Chennai City ,79th Independence Day ,Independence Day ,St. George's Fort ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...