×

மகளிர் ஸ்பீட் செஸ்: வேகம்… விவேகம் திவ்யா அமோகம்; அரையிறுதிக்கு முன்னேறினார்

ஷாங்காய்: ஜார்ஜியாவில் சமீபத்தில் நடந்த உலக கோப்பை செஸ் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் (19), கிராண்ட் மாஸ்டர் ஆனார். அதன் பின் அவர் பங்கேற்ற சீனாவில் நடந்து வரும் மகளிர் ஸ்பீட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக சீன கிராண்ட் மாஸ்டர் லே டிங்ஜீயுடன் நடந்த காலிறுதிப் போட்டியில் அவர் பங்கேற்றார். இப்போட்டியில் அபாரமாக செயல்பட்ட தேஷ்முக், 10-3 என்ற புள்ளிக் கணக்கில் மகத்தான வெற்றி பெற்றார். அதனால், அவர் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதையடுத்து, 3 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சீன கிராண்ட் மாஸ்டர் ஹோ யிஃபான் உடன், நாளை நடக்கும் அரை இறுதிப் போட்டியில் திவ்யா மோதவுள்ளார். இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு, ரூ.6 லட்சம் பரிசு கிடைக்கும்.

Tags : Chess ,Vivekam Divya ,Shanghai ,Divya Deshmukh ,World Cup Chess Championship ,Georgia ,Women's Speed Chess Championship ,China ,
× RELATED பிட்ஸ்