×

இயந்திரத்தில் தொழிலாளி கை சிக்கி முறிந்தது

கோவை, ஆக. 9: கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பார்க் அவன்யூ பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (55). இவர் ரத்தினபுரி கல்கி வீதியில் உள்ள கரும்பு சாறு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் முத்துராஜ் பணியில் இருந்த போது எதிர்பாராத விதமாக அவரது வலது கை எந்திரத்தில் சிக்கி முறிந்தது. வலியால் அலறி துடித்த அவரின் சத்தத்தை கேட்டு சக ஊழியர்கள் சென்று அவரை மீட்டனர்.

தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து முத்துராஜின் மனைவி ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் போலீசார் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை வாங்கியதாக நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Coimbatore ,Muthuraj ,Park Avenue ,Kuniyamuthur ,Kalki Street ,Ratnapura ,
× RELATED போக்குவரத்து துறை சார்பில்...