×

பஹல்காம் தாக்குதல் பதிலடிக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் ‘சூப்பர்’: நெதன்யாகு பேட்டி

 

டெல்அவிவ்: இந்தியாவுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை வழங்கும் முக்கிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 2.9 பில்லியன் டாலர் மதிப்பிலான ரேடார்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா இஸ்ரேலிடம் இருந்து இறக்குமதி செய்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. சுமார் 100 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நடவடிக்கையின்போது, பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைகளை இந்தியப் படைகள் வெற்றிகரமாக முறியடித்தன.

இந்தத் தாக்குதலில், இந்தியா மற்றும் இஸ்ரேல் இணைந்து தயாரித்த ‘பராக்-8’ ஏவுகணைகள் மற்றும் ‘ஹார்பி’ ஆளில்லா விமானங்கள் முக்கியப் பங்காற்றின. அதேபோல், தரை மற்றும் கப்பல்களில் இருந்து ஏவக்கூடிய பராக்-8 ஏவுகணைகள், 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி, 360 பாகை பாதுகாப்பை வழங்கும் வல்லமை பெற்றவை. இந்த ஆயுதங்களின் செயல்திறன் குறித்து சமீபத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் பென்ஜ் மின் நெதன்யாகு, ‘நாங்கள் வழங்கிய ஆயுதங்கள் போர்க்களத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டன. அவை போர்க்களத்தில் சோதிக்கப்பட்டவை என்பதால், எங்கள் இருதரப்பு உறவுக்கும் உறுதியான அடித்தளம் உள்ளது’ என்று குறிப்பிட்டார்.

 

Tags : Israel ,Pahalkam attack ,Netanyahu ,Tel Aviv ,India ,
× RELATED 30 ஆண்டுகளில் முதல் முறையாக சவுதியில் திடீர் பனிப்பொழிவு