×

உதகையில் பிற்பகல் நேரத்திலும் சூழ்ந்துள்ள கடும் பனிமூட்டம்: மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு

 

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 மாத காலமாகவே மழையின் தாக்கம் என்பது அதிகரித்து காணப்படுகிறது.வெயிலின் தாக்கம் முற்றிலுமாக இல்லாத நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்ந்த நிலையில் மேகமூட்டமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தான் கடந்த இரண்டு நாட்களாக மழை இன்றி வானிலையானது தெளிவாக காணப்படுகிறது.

நேற்றைய தினம் வெயிலின் தாக்கம் நன்றாக இருந்த நிலையில் இன்றைய தினம் காலை முதல் மதியம் வறை வெயிலின் அடித்த நிலை இருந்தது. குறிப்பாக உதகையில் இன்றைய தினம் மதியத்திற்கு பிறகு கடும் பனிமூட்டம் என்று சூழ்ந்திருகிறது இந்த பனிமூட்டமானது உதகை நகர் இருக்கக்கூடிய மாவட்டாட்சியார் அலுவலகம்.

பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் என்று சூழ்ந்து காணப்படுகிறது 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த பனிமூட்டம் சூழ்ந்துருப்பதனால் உதகை நகரமே இருள் சூழப்பட்டு காணப்படுகிறது.

எதிரே வரும் வாகனகள் கூட தெரியாத அளவிற்கு பணி முட்டம் அதிகமாக இருப்பதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தோடு வாகனகளை இயக்கிவருகிறார்கள் குறிப்பாக முகப்பு விளக்குகளை எறிய விட்டவாறு சென்று வரும் நிலை காணப்படுகிறது. அதேபோல கடும் புயல் நிலவுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

Tags : Nilgiris ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...