×

சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு; பொன்முடிக்கு எதிரான வழக்குகள் முடித்து வைப்பு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

 

சென்னை: சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக பெறப்பட்ட 115 புகார்கள் முடித்து வைக்கப்பட்டு புகார்தாரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறினார். உடனே நீதிபதி, ‘புகார்கள் முடித்து வைக்கப்பட்டது குறித்து புகார்தாரர்களிடம் ஒப்புகை பெறப்பட்டதா?’ என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், புகார்தாரர்கள் அனைவரிடமும் ஒப்புகை பெறப்பட்டுள்ளதாக கூறினார். இதையடுத்து நீதிபதி, அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Saivism ,Vaishnavism ,Ponmudi ,Tamil Nadu government ,High Court ,Chennai ,Madras High Court ,minister ,Justice ,P. Velmurugan ,
× RELATED இறுதி சடங்கு செலவுக்கு பணம்...