×

புதிய விமான நிலையங்கள் உள்பட 5 ஆண்டுகளில் 50 விமான நிலைய திட்டங்களை செயல்படுத்த முடிவு: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் 50 விமான நிலைய மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் நடந்த சர்வதேச விமான நிலைய கவுன்சில் மாநாட்டில் ஒன்றிய சிவில் விமானப்போக்குவரத்து செயலாளர் உம்லுன்மான் உல்னாம் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “விமான நிறுவனங்களை ஆதரித்தல், விமான பயிற்சி நிறுவனங்களை அதிகரித்தல் உள்பட நாட்டின் விமானப்போக்குவரத்து சூழலை மேம்படுத்த முழுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014ம் ஆண்டில் 74 விமான நிலையங்கள் இருந்தன. அது தற்போது இரட்டிப்பாகி 159 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் 50 விமான நிலைய மேம்பாட்டு திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் புதிய விமான நிலையங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள விமான நிலையங்களை மேம்படுத்துவது உள்ளிட்டவை அடங்கும். விமான நிலையங்களின் மேம்பாட்டுக்காக பொது தனியார் கூட்டாண்மை மீது அரசு கவனம் செலுத்துகிறது” என்று தெரிவித்தார்.

The post புதிய விமான நிலையங்கள் உள்பட 5 ஆண்டுகளில் 50 விமான நிலைய திட்டங்களை செயல்படுத்த முடிவு: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Union Government ,Union Government Information ,New Delhi ,Union Civil Aviation ,Umluman Ulnam ,Airports Council International conference ,Delhi ,Dinakaran ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தல்: காங். சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்