தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த பிறகு அமித் ஷாவிற்கு போன் செய்ததாக நிரூபித்தால் ராஜினாமா செய்கிறேன்: மம்தா ஆவேசம்

கொல்கத்தா: உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொலைபேசியில் அழைத்ததாக நிரூபித்தால் ராஜினாமா செய்கிறேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டு இருந்த தேசிய கட்சி அந்தஸ்தை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்ப பெற்றது. இந்நிலையில் கட்சியின் தேசிய அந்தஸ்து விவகாரம் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு தொலைபேசி அழைப்பு விடுத்ததாக எதிர்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி கூறியிருந்தார். இதனை முதல்வர் மம்தா மறுத்துள்ளார். தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, 10 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து அரசியல் கட்சிகளின் தேசிய அந்தஸ்தை மறுபரிசீலனை செய்வது விதிமுறையாக இருந்தது. அடுத்த மதிப்பாய்வு 2026ல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இதனை 2019ல் செய்துள்ளார்கள். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டதாக நிரூபித்தால் நான் ராஜினாமா செய்கிறேன்” என்றார்.

The post தேசிய கட்சி அந்தஸ்தை இழந்த பிறகு அமித் ஷாவிற்கு போன் செய்ததாக நிரூபித்தால் ராஜினாமா செய்கிறேன்: மம்தா ஆவேசம் appeared first on Dinakaran.

Related Stories: