நாடு முழுவதும் தேசிய மருத்துவ தினம் இன்று கொண்டாட்டம்: மருத்துவர்களை போற்றும் சிறப்பு பாடலை வெளியிட்ட மருத்துவர்

சென்னை: தேசிய மருத்துவ தினத்தையொட்டி மருத்துவர் நிதர்ஷனா பாண்டியன் என்பவர் இணையத்தில் வெளியிட்டுள்ள பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. மருத்துவர்களின் மகத்தான சேவையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி தேசிய மருத்துவ தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையை சேர்ந்த மருத்துவர் நிதர்ஷனா பாண்டியன் சிறப்பு பாடல் ஒன்றை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இரவு, பகல் பாராமல் அர்ப்பணிப்போடு சேவையாற்றும் மருத்துவர்களின் சிறப்பை போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் மருத்துவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா போன்ற இக்கட்டான காலங்களிலும் தன்னலம் கருதாமல் பிறர் நலன் கருதி சேவையாற்றிய மருத்துவர்களை இந்த நாளில் நினைவு கூர்ந்து போற்றுவது ஒவ்வொருவரின் கடமை.

The post நாடு முழுவதும் தேசிய மருத்துவ தினம் இன்று கொண்டாட்டம்: மருத்துவர்களை போற்றும் சிறப்பு பாடலை வெளியிட்ட மருத்துவர் appeared first on Dinakaran.

Related Stories: