நெல்லை: நாங்குநேரியில் பயணிகள் இடையிலான மோதல் பற்றி போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது அரசு பேருந்து நடத்துனர் தரையில் உருண்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நெல்லை பேருந்து நிலையம் சென்றபோது நேரடியாக நாகர்கோவில் மட்டும் செல்லும் என கூறி நாங்குநேரி பயணிகளை ஏற்ற நடத்துனர் மறுத்துள்ளார். ஆனால், நாங்குநேரியில் நிறுத்த வேண்டும் என பேருந்து நிலையத்தில் இருந்தவர்களும், நிறுத்தக்கூடாது என பேருந்துக்குள் இருந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து நாங்குநேரியில் பேருந்தை மறித்த மக்கள் பயணிகள், நடத்துனரிடம் வாக்குவாதம் செய்தனர். சம்பவ இடத்திற்கு போலீஸ் வந்ததை அடுத்து நடத்துனரை சிலர் செல்போனில் படம் எடுத்தனர். நாங்குநேரியில் பேருந்து நிற்காது என கூறியதை தவறு என்பதை உணர்ந்த நடத்துனர் தரையில் உருண்டு அழ தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் போலீசார் பயணிகளை சமாதானப்படுத்தியதை தொடர்ந்து அங்கிருந்து அரசு பேருந்து புறப்பட்டு சென்றது.
The post நாங்குநேரியில் அரசு பேருந்தில் பயணிகளுக்குள் மோதல்: போலீசார் முன் கதறியபடி தரையில் உருண்ட நடத்துனர் appeared first on Dinakaran.