நாகர்கோவில் கச்சிகுடா ரயிலில் செல்போன் திருட்டு: கூகுள் மேப் உதவியுடன் 2 மணி நேரத்தில் பிடிபட்ட திருடன்

நாகர்கோவில்: நாகர்கோவிலை சேர்ந்த ராஜ்பகத் என்பவரின் தந்தை நாகர்கோவில் இருந்து திருச்சி செல்ல இரவு 1.40 மணியளவில் நாகர்கோவில் கச்சிகுடா ரயிலில் எறியுள்ளார். அப்போது ரயிலில் இருந்த திருடன் அவரிடத்தில் இருந்து கருப்பு நிற பை, செல்போனை திருடிவிட்டு நெல்லையில் இறங்கி விட்டார். காலை 3.15 மணியளவில் பை மற்றும் செல்போன் காணாமல் போனதை அறிந்த அவர் தனது நண்பரின் செல்போன் வழியாக மகனுக்கு தகவல் அளித்துள்ளார்.

ஆனால் திருடன் செல்போனை சுவிட்ச் ஆப் செய்யாததால் தந்து நண்பருடன் கூகுள் மேப்பை வைத்து செல்போன் நடமாட்டத்தை கண்காணித்த ராஜ்பகத் திருடன் மீண்டும் நாகர்கோவில் வந்துவிட்டதை அறிந்துள்ளார். நாகர்கோவில் ஜங்ஷனில் இறங்கி பேருந்து நிலையத்திற்குள் சென்றுள்ளார். ராஜ்பகத் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து தேடியபோது திருடன் 2 மீட்டர் தொலைவில் இருப்பதாக கூகுள் மேப் காட்டியுள்ளது. தொடர்ந்து தனது தந்தையின் பையில் எழுதப்பட்டிருந்த எழுத்தை வைத்து அந்த திருடனை ராஜபகத் கையும்களவுமாக பிடித்து விட்டார். திருடனிடம் இருந்து பொருட்கள் மீட்கப்பட்டன. பின்னர் திருடன் சிறையில் அடைக்கப்பட்டான்.

The post நாகர்கோவில் கச்சிகுடா ரயிலில் செல்போன் திருட்டு: கூகுள் மேப் உதவியுடன் 2 மணி நேரத்தில் பிடிபட்ட திருடன் appeared first on Dinakaran.

Related Stories: